Friday, 22 July 2022

Best What Am I Riddles and Tricky Puzzles and Fun Brain Teasers | @Aparna's Rangoli Designs ​


 

ஜோக் 😄சிரிக்க மட்டுமே #shorts Jokes, Comedy

 சிரிக்க சில நொடி!!....


நபர் 1: சார் எங்கே கிளம்பிடீங்க?

நபர் 2: பசங்களுக்கு மொட்டை போடத்தான்...

நபர் 1: எங்கே?

நபர் 2: வேறெங்கே, தலையிலதான். 

நபர் 1: சார். கடிக்காதீங்க. எந்த ஊர்ல? 

நபர் 2: மூத்தவன் திருப்பதிக்கு பழநிலையும், இளையவன் பழனிக்கு திருப்பதியிலும்.  

நபர் 1: ஏன் சார், ரெண்டு பேருக்கும் ஒரே இடத்துல அடிக்கக் கூடாதா?

நபர் 2: அதெப்படி சார் முடியும்? இவன் தல வேற, அவன் தல வேற.

நபர் 1: ஐயோ, அது இல்ல சார். ஒரே ஊர்ல அடிக்கக் கூடாதா?

நபர் 2: நான் பழனியில வேலை பார்த்தப்போ திருப்பதி பிறந்தான். திருப்பதியில வேலை பார்த்தப்போ பழனி பிறந்தான். திருப்பதிக்கு திருப்பதின்னு பேர் வெச்சதால, திருப்பதிக்கு திருப்பதியில மொட்ட அடிக்க முடியுமா?

திருப்பதி பழனியில பொறந்ததால திருப்பதிக்கு பழநியிலதான் மொட்டை போடறோம். பழனி திருப்பதியில பொறந்ததால அவனுக்கு திருப்பதியில மொட்டை போடறோம். ஆனால் இரண்டு வேலையையும் ஒரே நேரத்துல முடிச்சிடறோம். 

திருப்பதி போய் பழனிக்கு மொட்டை போட்டுட்டு அங்கிருந்து பழனி வந்து திருப்பதிக்கு மொட்டை போட்டுட்டு வந்துடுவோம். ஆனா இப்ப சில வருஷமா..........

நபர் 1: ஏன் சார்? என்ன ஆச்சி சார்?

நபர் 2: இல்லை, ஒருத்தரு சொன்னாரு. ஏன் சாமிக்குள்ள வித்தியாசம் பார்க்கறீங்கன்னு. அதனால ஒரு வருஷம் திருப்பதிக்கு திருப்பதியிலும், பழனிக்கு பழனியிலும் இன்னொரு வருஷம் திருப்பதிக்கு பழனியிலும் பழனிக்கு திருப்பதியிலும் மொட்டை போடறோம். 

இந்த தடவை திருப்பதியில் பழனிக்கும், பழனியில திருப்பதிக்கும் மொட்டை போட வேண்டிய முறை.

நபர் 1: அப்போ நான் வரேன் சார்.....

நபர் 2: எங்க கிளம்பிடீங்க?

நபர் 1: மொட்டை போடத்தான்.

நபர் 2: யாருக்கு?

நபர் 1: எனக்குத்தான்.

நபர் 2: எங்க?

நபர் 1: வேறங்க? தலையிலதான்.

நபர் 2: போங்க சார். நான் சொன்னதை என் கிட்டே திருப்பறீங்க. நீங்க எந்த ஊர்?

நபர் 1: பக்கம்தான். வடபழனி.

😅😂🤣😀😃😆😄